உடுமலையில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக பூத் கமிட்டி, பாசறை மற்றும் மகளிரணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.


திருப்பூர்: அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக பூத் கமிட்டி, பாசறை மற்றும் மகளிரணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.



நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் உடுமலைசட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் கே ஆர் அர்ஜூனன்முன்னிலை வகித்தார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் அமோக வெற்றிக்கு அனைவரும் அயராது பாடுபட வேண்டும் மற்றும் வெற்றிக்கான வியூகங்கள் அமைப்பது குறித்து பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



இதில்உடுமலை நகர கழகச் செயலாளர் ஹக்கீம், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்பர் ராஜன், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் எஸ் எம் நாகராஜ், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...