உடுமலை சௌடாம்பிகா அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோடு பூமாலை சந்து பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் கடந்த 15ம் தேதி முதல் 25ஆம் தேதி இன்று முதல் நவராத்திரி விழா நடைபெறும் நிலையில் முக்கிய நிகழ்வாக ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு மாரியம்மன் கோவில் குருக்கள் உமா மகேஸ்வரன் தலைமையில் திருக்கல்யாணம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.



பின்னர் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது.



இந்த நிகழ்வில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மஞ்சள் கயிறு, வளையல் மற்றும் குங்குமம் அடங்கிய பிரசாத பைகள் வழங்கப்பட்டன. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



மேலும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நடைபெற்ற திருகல்யாண வைப்போகத்தை கோவில் நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...