கோவையில் 22 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 22 லட்சம் மதிப்புள்ள சுமார் 85 கிராம் எடையுள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் போதை பொருட்களை விற்பனை செய்த வடமாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போதை பொருள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் தொண்டாமுத்தூர் காவல் ஆய்வாளர் அப்பாதுரை தலைமையில் தனிப்படையினர் தொண்டாமுத்தூர்,நரசிபுரம் சாலை, குளத்துப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகேசோதனை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த வடமாநில நபரான, பெரிதுல் இஸ்லாம், என்பவரை சோதனை மேற்கொண்டுள்ளனர். அவரிடம் 12 கிராம் எடையுள்ள ஐந்து பாக்கெட்டுகளில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 60 கிராம் எடையுள்ள உயர்ரக போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில்,அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், தற்போது தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தில் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் கடந்த 3 மாதங்களாக வசித்துக் கொண்டு, கட்டிட கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

அதேபோல தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியில் வசித்து வரும் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த குதர்ஷா கத்துல் (35) சோதனை மேற்கொண்ட போலீசார் அவரது வீட்டில் இருந்து 12 கிராம் எடையுள்ள இரண்டு பாக்கெட்டுகளில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 25 கிராம் எடையுள்ள உயர்ரக போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் விசாரணையில் இந்த உயர்ரக போதைப் பொருளை அசாம் மாநிலத்தில் இருந்து ரயிலில் கொண்டு வந்து அந்த சுற்றுவட்டாரத்தில் வேலை செய்யும் வடமாநிலத்தவர்களுக்கு அதிக லாபத்தில் விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளது.



இதனை தொடர்ந்து குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்து இருவரிடம் இருந்து சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள 85 கிராம் எடையுள்ள உயர்ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...