கோவையில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் தலைமையில் ஆய்வு கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய பணிகள் ஆய்வுக்கூட்டம் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.


கோவை: தூய்மைப் பணியாளர்களுக்கான நலவாரியக் கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து அத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.



இந்த ஆய்வு கூட்டத்தில் பல்வேறு தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்கள் ஆணைய தலைவரிடம் தெரிவித்து வருகின்றனர்.



மேலும் இத்துறை சார்ந்து பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டு வருகிறது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உட்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...