சீல் வைக்கப்பட்ட கரி தொட்டி ஆலை இயக்கம் - உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

பல்லடம் அருகே குள்ளம்பாளையத்தில் சீல் வைக்கப்பட்ட கரி தொட்டி ஆலையை மீண்டும் இயங்கியதை கண்டுபிடித்த அதிகாரிகள், ஒரு மணி நேரத்தில் ஆலையை காலி செய்யவிட்டால், உரிமையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி, முறைகேடாக இயங்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குள்ளம்பாளையம் கிராமத்தில் அருள்முருகன் ஏஜென்சி என்ற பெயரில் சிதம்பரசாமி என்பவருக்கு சொந்தமான தேங்காய் தொட்டி சுடும் ஆலை கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு இயங்கி வந்தது. அப்பகுதி முழுவதும் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதாகவும், நீர்நிலைகள் மாசு அடைவதாகவும், மூச்சுத் திணறல், சுவாச கோளாறு போன்ற நோய் தொற்றுகள் ஏற்படுவதாகும் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்திய நிலையில் கடந்த ஒரு வருங்களுக்கு முன்பு திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த கரி தொட்டி ஆலைக்கு சீல் வைத்து மீண்டும் இயக்க தடை விரித்தனர்.



இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் கரி தொட்டி சுடும் ஆலை இயங்கி வருவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு வருடத்திற்கு முன்பு சீல் வைக்கப்பட்ட ஆலை மீண்டும் இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.



இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆலையை காலி செய்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்காவிட்டால் உரிமையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பட்டு வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இப்பகுதியில் தேங்காய் தொட்டி சுடும் ஆலைகளை இயக்கக் கூடாது எனவும் கட்டிட அனுமதி வழங்கக்கூடாது எனவும் ஏற்கனவே அப்பகுதி மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட ஆலை மீண்டும் இயங்கி வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இப்பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் இது போன்ற ஆலைகளை இயக்க அனுமதி அளிக்கக்கூடாது எனவும் அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...