பெரியநாயக்கன்பாளையம் அருகே கண்ணில் மிளகாய் பொடி தூவி வாலிபர்களிடம் செல்போன், பணம் பறிப்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே கண்ணில் மிளகாய் பொடி தூவி வாலிபர்களிடம் செல்போன், பணம் பறித்த மூன்று பேரை காவல்துறையினர் 24 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர்


கோவை: கண்ணில் மிளகாய் பொடியை தூவி, கத்தியைக்காட்டி மிரட்டி, ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் செல்போன்களை பறித்துச் சென்ற மூன்று பேரை தனிப்படை அமைத்து பிடித்த போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.

கோவை ஆனைமலை அடுத்த மாசாணி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் 23 வயதான அருண்குமார். அவரது நண்பர் வேட்டைக்காரன்புதூர் தெற்கு மேட்டு தெருவை சேர்ந்தவர் 22 வயதான சபரிநாதன். நண்பர்களான இவர்கள் இருவரும் பேஸ்புக்கில் அறிமுகமான அருண் என்பவர் உடன் பேசி வந்தனர்.

அப்போது அவர் நல்ல விலைக்கு கார் வாங்கி தருவதாக கூறி பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கோட்டை பிரிவுக்கு வருமாறு அழைத்திருந்தார். இதனை நம்பி 2 பேரும் நேற்று முன்தினம் கோட்டை பிரிவிற்கு ஒரு லட்சம் பணத்துடன் காரில் சென்றனர். அப்போது அங்கு பேஸ்புக் அருண் மற்றோர் காரில் நின்றுகொண்டு இருந்தார். இவர்கள் இருவரையும் உன்னிபாளையம் கட்கராயன் மலை அருகே அழைத்துச் சென்றார்.

ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் 2 கார்களும் நிறுத்தப்பட்டது. காரை நிறுத்திய அருண் அவர்களை அங்கிருந்த இரண்டு பேர்களிடம் அறிமுகப்படுத்தினர். அப்போது அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து திடீரென அருண்குமார் மற்றும் சபரிநாதன் கண்களில் மிளகாய் பொடியை தூவினர்.



இதை சற்றும் எதிர்பாராத அவர்கள் நிலைகுலைந்து போனதும், கத்தியால் அவர்களை மிரட்டியும், கீறியும் செல்போன்கள் மற்றும் அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் பணத்தை பறித்துவிட்டு காரில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனை அடுத்து அருண்குமார், சபரிநாதன் ஆகியோர் அந்த வழியாக வந்தவர்களிடம் நடந்ததை கூறியதோடு அவர்களின் உதவியுடன் பெரியநாயக்கன்பாளையம் போலீசிற்கு புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர்களின் கண்களின் மிளகாய் பொடியை தூவி செல்போன் மற்றும் பணத்தைப் பறித்து சென்ற மூன்று பேரையும் தேடி வந்தனர். மேலும் அருண்குமாரும், சபரிநாதனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழிபறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.



தொடர்ந்து சம்பவ நடந்த பகுதி மற்றும் அருகில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து செல்போன், பணம் பறிப்பில் ஈடுபட்ட 21 வயதான அருண் என்ற ஸ்டீபன் ராஜ், 22 வயதான சக்தி பிரகாஷ் மற்றும் வீரபாண்டியை சேர்ந்த 21 வயதான சாம்சன் மேத்யூ ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.



சம்பவம் நடந்து சுமார் 24 மணி நேரத்தில் 3 பேரையும் பிடித்த போலீசரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...