உடுமலை நாராயண கவிராயர் மணி மண்டபம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம்

உடுமலை நாராயண கவிராயர் மணி மண்டபத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் நல்வாய்ப்பாக எந்தொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை.


திருப்பூர்: உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் சேதமடைந்த மற்றும் இடியும் நிலையில் உள்ள சுற்றுச் சுவரையும் சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட குட்டைதிடலில் நாராயணகவி மணிமண்டபம் உள்ளது. குறிப்புதவி நூலகமான இங்கு போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நாள்தோறும் வந்து புத்தகங்களை வாசித்து குறிப்புகளை எடுத்து தேர்வுகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த மணிமண்டபத்தில் நிகழும் அமைதியான நிலையும் சுற்றுச்சூழலும் புத்தகங்களை வாசிக்கும் போட்டித் தேர்வுகளுக்கு உதவிகரமாக உள்ளதால் போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில் நாராயணவி மணிமண்டபத்தை பாதுகாக்கும் வகையில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அதை முறைப்படி சீரமைப்பதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சுற்றுச்சுவரின் ஒரு சில பகுதியில் அஸ்திவாரம் சேதமடைந்து ஆட்டம் கண்டு வருகிறது. இதனால் சுவர் அடியோடு பெயர்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி சேதம் அடைந்த சுவற்றின் வழியாக மர்ம ஆசாமிகள் இரவு நேரத்தில் மணிமண்டப வளாகத்திற்குள் நுழைந்து விடுகின்றனர். அங்கு அமர்ந்து மது குடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக போட்டி தேர்வர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது. எனவே உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் சேதமடைந்த மற்றும் இடியும் நிலையில் உள்ள சுற்றுச் சுவரையும் சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...