உடுமலை அரசு மருத்துமனையில் சுகாதார வளாகத்தை மேம்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் கழிப்பிடம் உள்ளிட்ட சுகாதார வளாகத்தை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அரசு சுகாதார மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது

திருப்பூர் மாவட்டம் உடுமலை வ.உ.சி. வீதியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்குள்ள சுகாதார வளாகத்தில் முறையான பராமரிப்பு பணி மேற் கொள்வதில்லை. இதனால் கடும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் பெண்கள் சுகாதார வளாகத்தின் கதவுகள் சேதமடைந்து திறந்த வெளியாக உள்ளது. இதன் காரணமாக இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து நிர்வாகத்திடம் பொதுமக்கள் தரப்பில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடுமலை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை மேம்படுத்துவதுடன் சேதமடைந்த கதவுகளை சீரமைக்க முன்வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...