அவிநாசியில் நடைபெற்ற திருமணத்தில் சமையல் கலைஞர்களுக்குள் மோதல் - கல்லால் தாக்கியதில் ஒருவர் பலி

அவிநாசியில் திருமணத்துக்கு வந்த சமையல் மற்றும் உணவு பரிமாறும் வேலை செய்யும் ஆட்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருமணத்திற்கு வந்த சமையல் லைஞர்கள் மற்றும் உணவு பரிமாறும் வேலை ஆட்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கல்லால் அடித்து கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஸ்ரீ குமரன் மஹால் அமைந்துள்ளது. இதில் இன்று திருமணம் நடைபெற்றது.

இதற்காக நேற்று ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியைச் சேர்ந்த சமையல் ஒப்பந்ததாரர் ஆனந்தன் என்பவர் மூலம் திருமணத்திற்கு சமையல் மற்றும் உணவு பரிமாறுவதற்காக 10 பெண்கள் உள்ளிட்ட 20 ஆண்கள் என அழைத்து வந்துள்ளார்.

இதில் நேற்று இரவு 12.00 மணிக்கு மேல் சமையல் கலைஞர்கள் தங்களுக்கு உண்டான உணவை சமைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அதில் ஆனந்தன் அழைத்து வந்த சமையல் கலைஞர்களில், கரூர் மாவட்டம் பொகலூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரகாஷ் 44, நாமக்கல் மாவட்டம், சோமசுந்தரம் மகன் சுந்தரமூர்த்தி 50, மற்றும் பெயர், விலாசம் தெரியாத மற்றொரு நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில், பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரும் சேர்ந்து அந்த அடையாளம் தெரியாத நபரை தாக்கியுள்ளனர். பதிலுக்கு அந்நபரும் இவர்கள் இருவரையும் தாக்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து அந்த அடையாளம் தெரியாத நபரை இருவரும் சேர்ந்து அடித்து மண்டபத்தை விட்டு வெளியில் துரத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட கடும் மோதலில் அடையாளம் தெரியாத அந்த நபரை பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரும் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அடையாளம் தெரியாத அந்த நபர் மயங்கி ரோட்டில் விழுந்து கிடந்துள்ளார். மயங்கி கிடந்த அந்த நபர் குறித்து, அப்பகுதியில் டூவீலரில் வந்து கொண்டிருந்த நபர்கள் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100 க்கு அழைத்து தகவலை சொல்லி உள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவிநாசி போலீசார் ரத்தக்காயத்துடன் கிடந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.



அங்கு பரிசோதித்ததில் அந்த நபர் ஏற்கனவே இறந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடல் திருப்பூர் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



இச்சம்பவம் குறித்து பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரையும் கைது செய்த போலீசார் இறந்த நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...