இஸ்ரேல் பாலஸ்தீன போர் - கோவையில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தில் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து கோவை டாடாபாத் பகுதியில் அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: இஸ்ரேலுக்கு பக்கபலமாக இருக்கும் அமெரிக்காவை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய பிரதமர் மோடியை கண்டித்தும் கோவை டாடாபாத் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாலஸ்தீனத்திற்கு உட்பட்ட காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.



இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு பக்கபலமாக இருக்கும் அமெரிக்காவை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய பிரதமர் மோடியை கண்டித்தும் கோவை டாடாபாத் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் பெரியாரிய, மார்க்சிய, இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தின் போது பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் எனவும், இஸ்ரேலுக்கு உறுதுணையாக இருக்கும் அமெரிக்க அரசை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய பிரதமரை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...