நீதிபதியின் பெயரை பயன்படுத்தி ஜாமீன் வாங்கித்தருவதாக பணம் மோசடி - குமஸ்தா சிறையில் அடைப்பு

தாராபுரத்தில் அடிதடி வழக்கில் தண்டனை பெற்ற கைதிக்கு முன் ஜாமின் வாங்கி தருவதாக நீதிபதி பெயரை கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட குமஸ்தாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: நீதிபதியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துக்கொண்டு தலைமறைவாக இருந்த குமஸ்தா ஸ்டீபனை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சித்ராவுத்தன்பாளையம், பகுதியை சேர்ந்த மாசானம் மகன் சாமிக்கண்ணு (52). இவர் கடந்த 4-ஆண்டுகளுக்கு முன்பு அடி தடி வழக்கில் 4-ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு கோவை மத்திய சிறையில் கைதியாக இருந்துள்ளார்.

அப்போது தாராபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த குமஸ்தா ஸ்டீபன் (50) என்பவர் சாமிக்கண்ணுவின் தாயார் மாரியம்மாளிடம் சாமிகண்ணுக்கு ஜாமின் வாங்க நீதிபதிக்கு பணம் தர வேண்டும் என கூறி பணம் வாங்கியுள்ளார். இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீன் வழங்க பிணை பத்திரம் தாராபுரம் சார்பு நீதிமன்றத்துக்கு வந்தது.

அதனை சார்பு நீதிபதி எம்.தர்மபிரபு கோவை மத்திய சிறைக்கு அனுப்பினார். கோவை மத்திய சிறைக்கு வந்த போது பிணை பத்திரம் எண் தவறாக உள்ளது என்று சொல்லி விடுவிக்கவில்லை. இதனை தெரிந்து கொண்ட குமஸ்தா ஸ்டீபன் பினை பெற்றுத் தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு பணத்தை யாரிடமும் தரவில்லை என சாமிகண்ணுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதியிடம் புகார் தெரிவித்தார்.

இதனை விசாரிக்க தாராபுரம் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார் விசாரணையில் குற்றம் ஊர்ஜிதம் செய்யபட்டது. நீதிபதியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துக்கொண்டு குமஸ்தா ஸ்டீபன் (43) மீது தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் மோசடி வழக்கில் குமஸ்தா ஸ்டீபன் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கடந்த 6-மாதங்களாக தேடி வந்த ஸ்டீபனை ஈரோட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் தலைமறைவாக இருந்த ஸ்டீபனை சப்‌ இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படையினர் பிடித்து தாராபுரம் அழைத்து வந்தனர். தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...