கோவை மண்டல திமுக விவசாய அணி ஆலோசனை கூட்டம் - முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற மண்டல திமுக விவசாய அணி ஆலோசனை கூட்டம் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.


கோவை: வால்பாறையில். நடந்த மண்டல திமுக விவசாய அணி ஆலோசனை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.



கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மண்டல திமுக விவசாய அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில விவசாய அணி துணைத்தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார்.நகர செயலாளர் சுதாகரன் வரவேற்றார். கூட்டத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் போன்ற பகுதிகளில் இருந்து திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் ஒன்றிய அரசு கொப்பரை கொள்முதல் விலை 108 இருந்து 150 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும். கொப்பரை கொள்முதல் நிதியை மூன்று மடங்காக உயர்த்தி தர வேண்டும். பசுமை வாரியத்தின் 10.11.2021 தேதியிட்ட வாரியத்தில் நடவடிக்கையை திரும்ப பெற நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நீட் தேர்வை திரும்ப பெற கையெழுத்து இயக்கத்திற்கு விவசாய அணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி AKS.விஜயன் சிறப்புரை யாற்றினார். இக்கூட்டத்தில் கோழிக்கடை கணேஷ், ஜே. பாஸ்கர், சுரேஷ்குமார் மற்றும் விவசாய அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...