உடுமலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காலி குடங்களுடன் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜல்லிபட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஊராட்சியில் நிலவும் அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணக்கோரி காலிக்குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர் : அடிப்படை பிரச்னைக்கு தீர்வு கோரி உடுமலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காலி குடங்களுடன் போராட்டம் நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜல்லிபட்டி யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஊராட்சியில் நிலவும் அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணக்கோரி காலிக்குடங்களுடன் கண்டனஆர்ப்பாட்டம். ஜல்லிபட்டி நால்ரோட்டில் நடைபெற்றது. உடுமலைஒன்றிய கமிட்டி உறுப்பினர் மாசானி தலைமையில் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி கமிட்டிஉறுப்பினர்கள் குமரகுரு, அஜித்குமார், மாதர்சங்கம் கமிட்டி கஸ்தூரி, வி.தொ.ச.செயலாளர் ரங்கராஜ், சிஐடியூ செயலாளர் ஜெகதீசன், முன்னாள் உடுமலைதாலூகா செயலாளர் கி.கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

ஜல்லிபட்டி ஊராட்சியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். புதுக்காலனி, வெங்கடேசாகாலனியில் வசிக்கும் மக்ககளை காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் போக்கோடு செயல்படும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஜல்லிபட்டியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும். 100 நாள் வேலைத் தொழிலாளர்களுக்கு 3 மாதகாலமாக சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது அநியாயம். உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தபட்டது.



50 பெண்கள் உட்பட ஏராளமானோர் காலிக்குடங்களுடன் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...