வால்பாறையில் பிடிப்பட்ட புலியை வனப்பகுதியில் விடுவது தொடர்பாக வனத்துறையினர் ஆலோசனை

வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்குள் வளர்க்கப்பட்டு வரும் புளியை வனப்பகுதிக்குள் விடுவதற்கு வனத்துறையினரின் கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: புலியின் நடவடிக்கைகள், வேட்டையாடும் திறன், புலியை வனப்பகுதியில் விடுவதற்கான இடம் தேர்வு, ரேடியோ காலர் பொருத்தும் பணியினை செயல்படுத்துதல் ஆகியவற்றை குறுத்தி ஆலோசனைக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு 27.9.2021 அன்று உடலில் காயங்களுடன் முடிஸ் எஸ்டேட் பகுதியில் பிடிக்கபட்ட புலிக்குட்டியை சிகிச்சை அளிக்கப்பட்டு மானாம்பள்ளி வன சரகத்திற்குள் மந்திரி மட்டம் என்ற பகுதியில் பத்தாயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைத்து புலியை வேட்டையாடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.



தற்போது புலியை வனப் பகுதிக்கு விடுவதற்கு வனத்துறை, புலியின் உடல் நலம் மற்றும் அவற்றின் தற்போதைய மனம் சார்ந்த நிலை குறித்து தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் தலைமையில் துணை இயக்குனர் பார்கவதேச தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் பிரதிநிதி கணேஷ் ரகுநாதன் என் சி எப் முதன்மை தலைமை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இக்குழுவில் புலியின் நடவடிக்கைகள் வேட்டையாடும் திறன், புலியை வனப்பகுதியில் விடுவதற்கான இடம் தேர்வு, ரேடியோ காலர் பொருத்தும் பணியினை செயல்படுத்துதல், புலியினை வனப்பகுதியில் விடப்பட்ட பின்னர் தொடர்ந்து தனி குழு அமைத்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்தல் போன்றவைகளை பற்றி ஆலோசனை செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...