பல்லடம் அருகே விபத்தில் சிக்கிய வட்டாட்சியரின் கார் - காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

பல்லடம் அருகே குள்ளம்பாளையத்தில் மடத்துக்குளம் வட்டாட்சியரின் கார் விபத்தில் சிக்கியதில், ஓட்டுநரும், உதவியாளரும் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


திருப்பூர்: நாய் குறுக்கே வந்ததால், மடத்துக்குளம் வட்டாட்சியரின் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வரைவு வாக்காளர் பட்டியலை வாங்கிக் கொண்டு மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் சுந்தரம் மற்றும் வட்டாட்சியரின் கார் ஓட்டுநர் ராஜசேகர் ஆகியோர் மடத்துக்குளம் நோக்கி உடுமலை சாலையில் சென்றுள்ளனர்.



அப்போது பல்லடத்தை அடுத்த குள்ளம்பாளையம் என்ற இடத்தில் கார் சென்றபோது திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது.



அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரமாக இருந்த சுற்றுச்சுவர் மீது மோதி அங்கிருந்த தென்னை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.



இதில் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுனர் ராஜசேகர் மற்றும் அலுவலக உதவியாளர் சுந்தரம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தோர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய சாலையில் மடத்துக்குளம் வட்டாட்சியரின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...