துடியலூர் அருகே கிருஷ்ணசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோவை துடியலூரை அடுத்த பன்னீர்மடை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: கிருஷ்ணசாமி கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவை துடியலூரை அடுத்த பன்னீர்மடை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னீர் மடையில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசாமி திருக்கோயில், அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் மராமத்து பணிகள், புதுப்பித்தல் போன்ற பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.

இதில் கடந்த 25ம் தேதி காலை 9 மணி அளவில் மகா கணபதி பூஜையுடன் தொடங்கிய விழாவில் வாஸ்து ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்று மாலை 5 மணியளவில் அருள்மிகு ஸ்ரீ தர்மராசா திருக்கோவிலில் இருந்து முளைப்பாளியை எடுத்து வருதல் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து புற்று மண் எடுத்து பூஜை செய்தல், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக வேள்வி பூஜைகள், பரிவார கலச பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 6 மணி அளவில் இரண்டாம் கால யாக வேள்வி பூஜை தொடங்கியது. அதில் கலச பூஜை, தீபாராதனை, ஹோமம், சுவாமிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று வெள்ளிக்கிழமை காலை மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றன. காலை 9 மணி முதல் விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.



இதில் யாக சாலைகளில் இருந்து தீர்த்தகுடங்கள் எடுத்துவரப்பட்டு கோயில் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.



அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோசங்களை எழுப்பினர். இவ்விழாவினை பேரூராதீனம் சாந்தலிங்கம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கெளமார சிரவையாதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள், ஸ்ரீ லலிதாம்பிகை பீடம் சுவாமி ஜகதாதமானந்த சரஸ்வதி, பழனியாதீனம் சாது சண்முக அடிகளார் உள்ளிட்டவர்கள் நடத்தி வைத்தனர்.



இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



அதன் பிறகு மஹா அன்னதானம் நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து மாலை ஸ்ரீ கிருஷ்ணசுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ உலகளந்த பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் பன்னீர்மடை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணசாமி கோயில் இறை வழிபாட்டு மன்றத்தினர், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...