அன்னூர் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - அரிசி மண்டிக்காரர் போக்சோவில் கைது

அன்னூர் அருகே இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரிசி மண்டி நடத்தி வரும் நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


கோவை: பாலியல் தொல்லை கொடுத்த நபரை தாக்கிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் அன்னுார் அருகே ஆறு மற்றும் ஒன்பது வயது சிறுமிகளுக்கு அரிசி மண்டி நடத்தி வரும் செல்வகணேஷ், 51, என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியரின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்வகணேஷ் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த செல்வகணேஷை தாக்கிய கணேசபுரம் மற்றும் கோவில்பாளையத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, அன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...