தரமின்றி சாலை அமைத்த மூவருக்கு மெமோ

800 மீட்டர் நீளத்துக்கு, ரூ.1.10 கோடியில் புதிதாக ரோடு போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. தரமின்றி சாலை அமைத்தற்காக மாநகராட்சி அதிகாரிகள் மூவருக்கு ‘மெமோ' வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் தரமின்றி சாலை அமைத்தற்காக மாநகராட்சி அதிகாரிகள் மூவருக்கு ‘மெமோ' வழங்கப்பட்டது.

பழைய ரோட்டை தோண்டி எடுக்காமல், லேசாக 'மில்லிங்' செய்து விட்டு, தார் ரோடு போடப்பட்டது. இத்தகவல், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கவனத்துக்கு சென்றது.நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி அளவில், அப்பகுதிக்கு நேரில் சென்று அவர் ஆய்வு செய்தார்.

புதிதாக போடப்படும் ரோட்டின் நீளம், அகலம், தார் கலவை வெப்ப அளவு உள்ளிட்டவற்றை ஆய்வுக்கு உட்படுத்தினார். ஒரு மணி நேரம் அங்கேயே இருந்து, தரமாக ரோடு எப்படி போடுவது என்பது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.

நேற்று காலை, 8:00 மணிக்கு அதே பகுதிக்கு கமிஷனர் மீண்டும் சென்று ஆய்வு செய்தார்.

ஜல்லிக்கற்கள் மீது ரோலர் இயக்கி, 'காம்பேக்ட்' செய்யாமல் இருந்தது. ஆங்காங்கேகற்கள் பெயர்ந்து கிடந் தன.அவர் சொல்லிக் கொடுத்தது போல், தார் ரோடு போடாததால், கோபமடைந்த கமிஷனர், ஒப்பந்த நிறுவனமான, 'விஷ்ணு இன்ப்ரா' நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

இப்பணியை கள ஆய்வு செய்து, தரத்தை உறுதி செய்யாத குற்றத்துக்காக, உதவி பொறியாளர் பர்மான் அலி, உதவி நிர்வாக பொறியாளர் பிரபாகரன், நிர்வாக பொறியாளர் கருப்பசாமி ஆகியோருக்கு 'மெமோ' கொடுக்க, கமிஷனர் உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...