போர் தொடுத்து வரும் இஸ்ரேலிய ராணுவத்திற்கு எதிர்ப்பு – திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

கொடூர தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் ராணவத்தை கண்டித்தும், அதற்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருப்பூர் சிடிசி கார்னர் பகுதியில் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு மற்றும் ஷாஹின்பாக் போராட்டக் குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: இஸ்ரேலிய இராணுவம் நடத்தி வரும் கொடூர தாக்குதல்கலை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகளை கண்டித்தும் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு - ஷாஹின்பாக் போராட்டக் குழு சார்பாக திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த 7- ந் தேதி தொடங்கி கடந்த இரண்டு வாரங்களாக இஸ்ரேலிய இராணுவம் கொடூர தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச சட்டங்களை மதிக்காமலும், மனித உரிமைகளை புறந்தள்ளி, கொடூரமான இன அழிப்பு முன்னெடுத்து வரும் இஸ்ரேலையும், அதற்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகளை கண்டித்தும், திருப்பூர் சிடிசி கார்னர் பகுதியில் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு மற்றும் ஷாஹின்பாக் போராட்டக் குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தை கண்டித்தும், அமெரிக்கா அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...