சூலூரில் வெண்புறா மற்றும் அதிமுக சார்பில் கால் பந்து போட்டி - பல்வேறு அணிகள் பங்கேற்பு

கோவை மாவட்டம் சூலூரில் வெண்புறா மற்றும் அதிமுக சார்பில் மாநில அளவிலான ஐந்து பேர் கலந்து கொள்ளும் கால் பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை சூலூர் அதிமுக எம்எல்ஏ விபி கந்தசாமி கலந்துகொண்டு கால்பந்து ஆட்டத்தை தொடங்கி வைத்தார்.


கோவை: கால்பந்து போட்டியில் வெற்றிப்பெறும் அணிகளுக்கு அதிமுக சார்பில் பரிசுத்தொகை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட உள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கோவை மாவட்டம் சூலூரில் வெண்புறா மற்றும்அதிமுக சார்பில் மாநில அளவிலான ஐந்து பேர் கலந்து கொள்ளும் கால் பந்து போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மாநிலத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்து கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் சுற்றாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் கால்பந்து அணியினருக்கு பரிசுத்தொகை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட உள்ளது.



இந்த போட்டியை சூலூர் அதிமுக எம்எல்ஏ விபி கந்தசாமி கலந்துகொண்டு கால்பந்து ஆட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இது தொடர்பாக பேசிய வெண்புறா கால்பந்து அமைப்பைச் சார்ந்த சபரி, கால்பந்தை ஊக்குவிக்கும் விதமாக கால்பந்து போட்டி நடைபெறுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கால்பந்து அணியினர் பங்கேற்று உள்ளனர்.

இதில் வெற்றி பெறும் அணியினருக்கு பரிசுத்தொகை அதிமுக சார்பில் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...