திருப்பாவை பாடல்களை பாடினால் மழை வரும் என சடகோப ராமானுஜ ஜீயர் உடுமலை திருப்பதி கோவிலில் பேட்டி

முழு நிலவான ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று உடுமலை திருப்தி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் மேல்கோட்டை சடகோப ராமானுஜ ஜீயர் கலந்துகொண்டார்.


திருப்பூர்: உடுமலை திருப்பதி கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் மேல்கோட்டை சடகோப ராமானுஜ ஜீயர் பக்தர்களுக்கு அர்ச்சதை தூவி ஆசிர்வாதம் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.



முழு நிலவான ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.



இதில் கலந்து கொள்வதற்காக மேல்கோட்டை சடகோப ராமானுஜ ஜீயர் வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து திருப்பதி வேங்கடேச பெருமாள், பத்மாவதிதாயார், ஆண்டாள் உள்ளிட்ட கோவில் வளாகத்தில் எழுந்தருளி அருள்பாளிக்கும் கடவுள்களுக்கு சிறப்பு பூஜையை ஜீயர் நடத்தி வைத்தார்.



இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் ஜீயர் பக்தர்களுக்கு அர்ச்சதை தூவி ஆசிர்வாதம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, முழு மனதோடு கடவுளிடம் சரணடைந்தால் நிச்சயம் அருள் பாலிப்பார். இதற்காக நமக்குள் இருக்கும் குறைகளை முதலில் நீக்க வேண்டும். பின்னர் கடவுளிடம் பிரார்த்தனை வைக்க நினைத்ததை நிறைவேறும். மேலும் கோவிலில் நம்மால் இயன்ற சேவைகளை செய்ய வேண்டும். தற்போது போதிய அளவில் மழைப் பொழிவு இல்லை. இதனால் மழை வேண்டி ஆண்டாளை நினைத்து மனமுருகி திருப்பாவை பாடல்களை 30 நாட்கள் தொடர்ந்து பாட வேண்டும். 31-வது நாள் பெருமாள் ஆசியுடன் நிச்சயம் மழைப் பொழிவு ஏற்படும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...