கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் - கோவை மேயர் கல்பனா தொடங்கி வைப்பு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் “கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை" மேயர் கல்பனா ஆனந்தகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.


கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கு பணிகளில் ஈடுபட்டுவருவதையும், வெள்ளலூர் குப்பை உரக்கிடங்கில் மக்கும் குப்பைகளைக் கொண்டு (Micro Compost Centre) நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாடுகள் மற்றும் அலுவலகப் பதிவேடுகளையும் மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.1க்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் "கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை" மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் இன்று (28.10.2023) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.



அதனைத் தொடர்ந்து, அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் "கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை" மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், தொடங்கி வைத்து, மருத்துவ பரிசோதனையை பார்வையிட்ட பின்பு, கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை மேயர் அவர்கள், தொடங்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.



பின்னர், கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் உக்கடம் மற்றும் பீளமேடு பகுதிகளிலிருந்து லாரிகளில் மூலம் சேதாரமாகும் மொத்த குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகள் மற்றும் அலுவலகத்திலுள்ள பதிவேடுகள், குப்பைகளின் எடை மேயர் அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து, வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கு பணிகளில் ஈடுபட்டுவருவதையும்,



வெள்ளலூர் குப்பை உரக்கிடங்கில் மக்கும் குப்பைகளைக் கொண்டு (Micro Compost Centre) நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாடுகள் மற்றும் அலுவலகப் பதிவேடுகளையும் மேயர் அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர், வெள்ளலூர் குப்பை உரக்கிடங்கில் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் (MRF-Material Recovery Facility) மையத்தின் செயல்பாடுகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின்போது வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் கற்பகம் இராஜசேகரன், புஷ்பமணி, சித்ரா தங்கவேல், சாந்தாமணி, அஸ்லாம் பாஷா, உதவி ஆணையர்கள் ஸ்ரீதேவி (வடக்கு), பிரேம் ஆனந்த் (தெற்கு), துடியலூர் நகர்நல மைய மருத்துவ அலுவலர் மரு.ரவி, உதவி நகரமைப்பு அலுவலர் எழில், மண்டல சுகாதார அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், ஆண்டியப்பன், உதவி பொறியாளர் ஜெயின்ராஜ், வெள்ளலூர் குப்பை கிடங்கு உதவி பொறியாளர் ரவிக்கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் பௌன்ராஜ், முருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...