திருப்பூர்- ஜார்கண்ட் இடையே தினசரி ரயில் - ஆளுநர் உறுதி

திருப்பூரில் நடந்த வட மாநில தொழிலாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் திருப்பூர்- ஜார்கண்ட் தினசரி ரயில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: வட மாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலம் சென்று வர ஏதுவாக திருப்பூர்- ஜார்கண்ட இடையே ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் - பெருமாநல்லூர், கே.எம் நிட்வேர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பணி புரியும் வடமாநில தொழிலாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.



அதில் தொழில், தொழிலாளர் நலன் என்பது நாணயத்தின் இரு பக்கம் போன்றது எனவும், வட மாநில தொழிலாளர்கள், தங்களது சொந்த மாநிலங்களை விட தமிழகத்தில் பாதுகாப்பாகவும், மகிழ்வாகவும் பணி புரியக் கூடிய சூழல் உள்ளதாகவும், குறிப்பாக இங்கு பணி புரியக் கூடிய ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது வீடுகளில் உள்ளது போன்ற எண்ணத்துடன் பணியாற்றி வருவதாகவும், திருப்பூரிலிருந்து, ஜார்கண்ட் மாநிலத்திற்கு வாரம் ஒருமுறை மட்டுமே ரயில் வந்து செல்கிறது. தினமும் வந்து செல்லும்படியான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாகவும் பேசினார்.



தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றி அங்கேயே படித்து இளநிலை பட்டம் பெற்ற 17 பெண்களுக்கு பட்டங்களை ஆளுநர் வழங்கினார்.



அதனை ஜார்கண்ட் மாநில தொழிலாளர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். தொடர்ந்து ஏற்றுமதி நிறுவனத்திற்கு சென்ற ஆளுநர் வட மாநிலத்தவர்கள் அங்கு பணி புரிவதை பார்வையிட்டு, அவர்களிடம் கலந்துரையாடினார். நிகழ்வின் போது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம், டாலர் அப்பரேல்ஸ் நிறுவன உரிமையாளர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...