போக்சோ வழக்கு கைதி பணியின் போது தப்பி ஓடியதால் பரபரப்பு

கோவை மத்திய சிறைக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வந்த போக்சோ கைதி தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கோவை: தப்பியோடிய போக்சோ கைதியை பிடிக்க கோவை காவல்துறை தீவிரம் காட்டியுள்ளனர்.

கோவை மத்திய சிறைக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் காந்திபுரம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் நன்னடத்தை கைதிகளை போலீசார் பாதுகாப்புடன் பணி அமர்த்தி வருகின்றனர். இதன் மூலம் கைதிகள் அவர்களுக்கான வருவாயையும் ஈட்டி கொள்கின்றனர். இந்நிலையில் இன்று காலை ஷிப்ட்டை மாற்றுவதற்காக சிறை காவலர்கள் பணியில் இருந்தவர்களின் எண்ணிக்கையை எண்ணி பார்க்கும் பொழுது ஒரு கைதி காணாமல் போயுள்ளார்.

இது குறித்து சக கைதிகளிடம் கேட்கையில் காலை சுமார் 5:30 மணியளவில் இருந்து அவரை பார்க்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்து காணாமல் போனவர் கூடலூர் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதான விஜய் ரத்தினம் என்பது தெரிய வர, இது குறித்து காட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...