ஆலய முன்பகுதியில் போராட்டம் நடத்திய பொதுமக்களால் பரபரப்பு

கோவையில் ஞாயிறு ஆண்டவரை வழிபடாமல் செல்ல மாட்டோம் என்று மக்கள் முடிவு எடுத்து ஆலய முன் பகுதியில்  வழிபாடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவையில் ஆலயத்ததிற்குள் செல்ல முடியாமல் வாசலில் நின்று பலர் வழிபாடு நடத்தினர்.



சி.எஸ்.ஐ போத்தனுர் ஆலய பிரச்சினையில் 27.10.2023 அன்றுRDO South தலைமையில் Enquiry நடந்தது. அந்த Enquiry முடிவில் RDOபொது மக்கள் ஞாயிறு வழிபாடு நடத்த யாரும் தடை செய்ய கூடாது. மேலும் அங்கு எந்த பாதிரியாருக்குவழிபாடு நடத்த LEGAL RIGHT இருக்கிறதோ அவர் வழிபாடு நடத்த வேண்டும் என்று வாய் மொழி உத்தரவு பிறப்பித்தார்.



ஆயர் கெர்சோம் ஜேக்கப் திருமண்டல நிர்வாகத்தால் சஸ்பென்சலில் வைக்கப்பட்டுள்ளார். ஆகவே புதிதாக அங்கே போஸ்டிங் போடப்பட்ட ஆயர் ஜெயசீலன்தான் வழிபாடு நடத்த Legal Right உள்ளது என்பதால் அவர் இன்றுகாலை ஆராதனை நடத்த சென்றார். அப்போது சட்ட விரோதமாக ஆயர் கெர்சோம்ஆலய காம்பவுண்டு மற்றும் ஆலயம் பூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.



ஆகவேவழிபாட்டில் கலந்து கொள்ள வந்த திரளான மக்கள் ரோட்டில் நின்று கொண்டிருந்தனர். முடிவில் ஞாயிறு ஆண்டவரை வழிபடாமல் செல்ல மாட்டோம் என்று மக்கள் முடிவு எடுத்து ஆலய முன் பகுதியில் வழிபாடு நடத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...