கட்டுமான பொருள்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துமாறு அரசுக்கு கோரிக்கை

கட்டுமான பொருள்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அரசுக்கு கோவை மாவட்ட இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் கோரிக்கை எடுக்கப்பட்டுள்ளது


கோவை: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என அரசுக்கு பொறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை அரசு கட்டுபடுத்த வேண்டும் என்றும் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு தொட்டி முறையாக அமல்படுத்துவதை அரசு கண்கானித்து அதை முழுமையாக நடைமுறை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயமுத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

கோயமுத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் ஆறாம் பெரு விழா நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கட்டிட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இச்சங்கத்தின் பொறுப்பு தலைவர் முத்தமிழ்செல்வன், கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை அரசு கட்டுபடுத்த வேண்டும் என்றும் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு தொட்டி முறையாக அமல்படுத்துவதை அரசு கண்கானித்து அதை முழுமையாக நடைமுறை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வைப்பதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...