போக்சோ கைதி ஓட்டம் - சிறை காவலர்கள் தற்காலிக பணிநீக்கம்

போக்சோ வழக்கு கைதி பணியின் பொழுது தப்பி ஓடிய விவகாரத்தில் கோவை மத்திய சிறை காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: போக்சோ கைதி ஓடிய விவகாரத்தில் சிறை காவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்

கோவை மத்திய சிறைக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் காந்திபுரம் பகுதியில் இயங்கி வரும் நிலையில் நன்னடத்தை கைதிகளை போலீசார் பாதுகாப்புடன் பணியமத்துவர்.

இந்நிலையில் இன்று காலை பெட்ரோல் பங்கில் பணியிலிருந்து கூடலூர் மகளிர் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதான விஜய் ரத்தினம் என்ற கைதி அங்கிருந்து தப்பி ஓடினார். இச்சம்பவம் குறித்து கோவை காட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி, பணியிலிருந்த ஜெகநாதன், கனிராஜ், விக்னேஷ் குமார் ஆகிய காவலர்களை தற்காலிக பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மூன்று காவலர்களையும் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...