உடுமலை அருகே பராமரிப்பு இன்றி காணப்படும் சமுதாய நலக்கூடம் பராமரிக்க வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பராமரிப்பின்றி இருக்கும் சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


திருப்பூர்: குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை அளிக்கும் சமுதாய நலக்கூடத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பெரியவாளவாடி ஊராட்சியில் வாரச்சந்தை வளாகம் உள்ளது. இந்த சந்தை வளாகத்தில் பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் பயன் பெறும் வகையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. பல்வேறு சுப நிகழ்ச்சிகள் சீரும் சிறப்புமாக நடைபெற்று வந்த அந்தக் கட்டிடத்தை முறைப்படி பராமரிப்பு செய்யவில்லை. இதன் காரணமாக கட்டிடம் படிப்படியாக சேதம் அடைந்து தற்போது இடிந்து விடும் நிலையில் உள்ளது.

மேலும் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் அந்த கட்டிடத்தில் இருந்து கான்கிரீட் துகள்கள் உதிர்ந்து கீழே விழுந்து வருவதாகவும் கூறப்படுகிறது.அதை இடித்து அகற்றக்கோரி பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் அலட்சியம் காட்டப்பட்டு வருகிறது.

இதனால் சந்தை வளாகத்துக்கு வருகை தருகின்ற பொதுமக்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. விபத்து நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு பொதுமக்களை காப்பாற்றும் கடமை அதிகாரிகளை சார்ந்ததாகும். எனவே வாளவாடி வாரச்சந்தை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை இடித்து அகற்றுவதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...