துடியலூர் அருகே நடுரோட்டில் தம்பதியினர் மீது தாக்குதல் - இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை

கோவை துடியலூர் அருகே நடுரோட்டில் ஜீப் ஓட்டுநர் மற்றும் அவரது மனைவியை தாக்கிக் கொண்டிருந்தவர்களை தடுக்க வந்த மாவட்ட கவுன்சிலர் கவி சரவணன் என்பவரை அடிக்கப் பாய்ந்த 2 பேரை துடியலூர் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.


கோவை: கார் மீது ஜீப் மோதுவது போல் வந்ததாக கூறி ஜீப்பில் வந்த கணவன்-மணைவி இரண்டு பேர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பேரை காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் அருகே வடமதுரை பகுதியில் மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து பன்னீர்மடை திரும்பும் சாலையில் TN38CA4833 என்ற பதிவு எண் கொண்ட ஹுண்டாய் வெர்னா கார் திரும்பியுள்ளது. இதனை ஸ்டீபன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவர் வழக்கறிஞர் என தெரிகிறது. அவருடன் அவரது நண்பர் டோமினிக் பிரான்சிஸ் உடன் வந்துள்ளார்.

அப்போது பன்னீர்மடை சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் திரும்புவதற்காக கார் ஜீப் வந்துள்ளது. இதனை துடியலூர் காளியம்மாள் காலனியைச் சேர்ந்த செந்தில் நாதன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவருடன் மனைவியும் வந்துள்ளார்.



அப்போது வடமதுரை ஜங்சனில் ஜீப் காரில் மோதுவது போல் வந்தாகக் கூறி காரில் இருந்து இறங்கி வந்த ஸ்டீபன் மற்றும் டோமினிக் பிரான்சிஸ் ஆகிய 2 பேரும் ஜீப்பை ஓட்டிவந்த செந்தில்நாதனை கீழே இறங்கச் சொல்லி நடுரோட்டில் சட்டையைப் பிடித்து தாக்குதலில் ஈடுபட்டனர்.



கணவரை அடிப்பதைப் பார்த்து செந்தில்நாதனில் மனைவி அவர் முன்பு அரணாக நின்று அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.



ஆனால் அவர்கள் ரவுடிகளைப் போல் அவரையும் மீறி மீண்டும் மீண்டும் தாக்கிக்கொண்டிருந்தனர்.



அதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் கோவை மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமார் ஆகியோர் அவர்களை தடுக்க முட்பட்டனர். ஆனால் அவர்களை தாக்கியும் கெட்ட வார்த்தைகளாலும் திட்டினர்.



அவர் மாவட்ட கவுன்சிலர் என்று கூறி அடையாள அட்டையை காண்பித்தும் நீ யார்டா நீ யார்டா எனக்கூறி கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி அடிக்கப் பாய்ந்தனர். மேலும் நாங்களும் கட்சிக் காரங்கதான் என்று மிரட்டல் விடுத்தனர்.



அப்போது அங்கு வந்த துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்களை தடுத்து நிறுத்தி இருதரப்பினரையும் காவல் நிலையம் வரச் சொன்னபோது ஸ்டீபன் மற்றும் டோமினிக் இருவரும் காரை எடுக்காமல் ஜீப்பை எடுக்கச் சொல்லி காவல் உதவி ஆய்வாளரையும் மிரட்டிக் கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...