பிரதமர் மோடியின் சாதனை பற்றி உடுமலையில் பாஜகவினர் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கினர்

உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக மோடி அரசு எடுத்த சீரிய நடவடிக்கைகள் குறித்து பட்டியலின மக்களுக்கு வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.


திருப்பூர்: 4, 11 மற்றும் 21 ஆகிய வார்டுகளில் நகர பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி தலைவர் பழனிச்சாமி தலைமையில் மோடி அரசின் சாதனைகள் பற்றி வீடு வீடாகச் சென்று எடுத்துக்கூறப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக மோடி அரசு எடுத்த சீரிய நடவடிக்கைகள் குறித்து பட்டியலின மக்களுக்கு எடுத்து உரைக்கும் வகையில் 4, 11 மற்றும் 21 ஆகிய வார்டுகளில் நகர பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி தலைவர் பழனிச்சாமி தலைமையில் நகர பாரதிய ஜனதா கட்சி நகரத் தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் நோட்டீஸ் வழங்கி வீடு வீட்டுக்கு சென்று மோடியின் ஆட்சி சாதனைகளை விளக்கிக் கூறப்பட்டது.



இக்கூட்டத்தில் நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி மற்றும் நகர துணைத் தலைவர் கண்ணப்பன், நகர தரவு மேலாண்மை தலைவர் கோபிநாத் மற்றும் கிளை தலைவர் துரைராஜ், நகர மத்திய நலத்திட்ட பிரிவு தலைவர் மற்றும் வள்ளியம்மாள் காலனி செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...