உடுமலை அருகே நடைபெற்ற பொன்னர் சங்கர் திருக்கல்யாணம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மெட்ராத்தியில் அருள்மிகு பொன்னர் சங்கர் திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் நடந்த பொன்னர் சங்கர் திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

உடுமலை அருகே மெட்ராத்தி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் பொன்னர் சங்கர் கதைப்பாடல் தொடர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பெரியகாண்டி அம்மன் தவசு, செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம், தாமரை அரியநாச்சியின் பூப்பு நன்னீராட்டு விழா, குன்னுடையாசாமி தாமரை அரியநாச்சி கல்யாணம், செல்லாண்டி அம்மன் தேரோட்டம், தாமரை தவசு, பொன்னர் சங்கர் அருக்காணி தங்கம் பிறப்பு ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வந்தது.



இதனைத் தொடர்ந்து அருள்மிகு பொன்னர் சங்கர் திருக்கல்யாணம் நடைபெற்றது.



முன்னதாக ஐம்பொன்னால் ஆகிய பொன்னர், சங்கர், ஸ்ரீபச்சாயி, ஸ்ரீபவளாயி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து கணபதி பூஜை, செல்லாண்டியம்மன் பூஜை மற்றும் சிறப்பு ஹோமத்துடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.



திருக்கல்யாணத்தை தொடர்ந்து பொன்னர் சங்கருக்கு கிரீடம், செங்கோல் சாத்தப்பட்டு பட்டாபிஷேக விழாவும் நடந்தது.



இந்நிகழ்ச்சியை உடுமலை முனைவர் க. சீதாராமன், உடுமலை சிவா ஆகியோர் கதைப்பாடல் வழி நடத்தினர் நிகழ்ச்சியில் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...