ஒரே நேரத்தில் 108 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு - சீர்வரிசையாக ஊட்டச்சத்து பொருட்கள்

கோவையில் ஏழை எளியகர்ப்பிணி தாய்மார்கள் 108 பேருக்கு ஒரே நேரத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.


கோவை: எளிய கர்ப்பிணி பெண்களின் கனவை நனவாக்கும் வகையில் 108 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.



கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அலையன்ஸ் கிளப், பசுமை நிழல் அறக்கட்டளைகள் மற்றும் தமிழ்செல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய கர்ப்பிணி தாய்மார்கள் 108 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



பாரம்பரிய முறைப்படி கர்ப்பிணி தாய்மார்களுக்கு 6 வகையான அறுசுவை உணவுடன் கண்ணாடி வளையல்கள், வளைகாப்பு சீதனங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு மஞ்சள் பூசி சடங்குகள் செய்யப்பட்டன.

இதுகுறித்து வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணித்தாய்சௌமியா ஸ்ரீ கூறும்போது,



சாதி பேதம் இன்றி கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தியது வரவேற்கத்தக்கது. இதுபோல் கோவையில் எங்கும் நடைபெற்றது இல்லை. வீட்டில்நடைபெறுவது போல சடங்குகள் செய்யப்பட்டு சீதனங்கள் வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

இது குறித்து பசுமை நிழல் அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகி விஜயகுமார் பேசும் போது,



வளைகாப்பு நடத்த முடியாமல் இருக்கும் ஏழை எளிய கர்ப்பிணி பெண்களின் கனவை நனவாக்கும் வகையில் 108 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களுடன், தாய் வீட்டு சீதனம் பசுமை நிழல் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...