அரசு அலுவலரை தாக்கியதாக திமுக ஒன்றியக்குழு தலைவர் மீது புகார்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றிய குழு தலைவராக இருக்கும் திமுகவைச் சேர்ந்த தேன்மொழி அரசு அலுவலரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திருப்பூர் : அரசு அலுவலரை தாக்கியதாக திமுக ஒன்றியக்குழு தலைவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றிய குழு தலைவராக இருப்பவர் தேன்மொழி திமுகவைச் சேர்ந்த இவர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணக்காளராக வேலை பார்த்து வரும் அம்சவேணி என்பவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதுகுறித்து கணக்காளர் அம்சவேணி இடம் கேட்டபோது அவர் கூறியதாவது: வழக்கமாக டெண்டர்களுக்கான பில் தொகையை அவ்வப்போது பரிந்துரை செய்து அனுப்பி விடுவது வழக்கம். ஆயுத பூஜை விடுமுறைக்கு முன்பாக வந்த டெண்டருக்கான பில் தொகை நிலுவையில் உள்ளது. இந்த டெண்டர் பில் என்னிடம் வரவில்லை இதுகுறித்து சேர்மன் இடம் கூறியபோது நான் வேண்டுமென்றே பில் தொகையை வழங்காமல் வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும் ஒப்பந்ததாரரை மிரட்டியதாக கூறியதுடன் கதவை தாளிட்டு கொசு பேட்டால் என்னை அடித்து தாக்கினார். வெளியே போடி என்று கூறியதைத் தொடர்ந்து நானும் அவரை எதிர்த்துப் பேச வேண்டிய சூழல் உருவானது. ஒன்றிய சேர்மனின் இந்த செயல்பாடு குறித்து கலெக்டரிடம் புகார் அளிக்க உள்ளேன் என்றார். இதுகுறித்து ஒன்றிய சேர்மன் தேன்மொழியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:வாரத்துக்கு இரண்டு பில்கள் மட்டுமே பாஸ் செய்யப்படுகிறது.

இதனால் ஒப்பந்ததாரர்கள் பில் தொகைக்காக காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. பில் தொகை குறித்து ஒப்பந்ததாரர் என்னிடம் கேட்டதன் பேரில் கணக்காளரிடம் இது குறித்து விசாரித்தேன். இதற்காக ஒப்பந்ததாரரை மொபைல் போனில் அழைத்து அம்சவேணி மிரட்டி உள்ளார். பில் தொகை நிலுவையில் இருப்பது குறித்து கேட்டதற்கு போடி வாடி என ஒருமையில் பேசினார். இதனால் நானும் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். ஆனால் நான் அடித்து தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கலெக்டரிடம் புகார் அளிப்பேன் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...