வால்பாறை எஸ்டேட் பகுதியில் இரண்டு யானைகள் மோதிக்கொண்டதில் ஒரு யானை பலி

வால்பாறையை அடுத்துள்ள சக்தி எஸ்டேட் அறுகாமையில் உள்ள மகாலட்சுமி எனும் எஸ்டேட் பகுதியில் ஏலக்காய் தோட்டம் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி யானைகள் ஊடுறுவி பயிர்களை சேதம் செய்துவிடுவதும், அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், மகாலட்சுமி எஸ்டேட் ஏலக்காய் தோட்டத்தில் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. அப்போது எஸ்டேட் பணியாளர்கள் அப்பகுதியில் சோதனையிட்டபோது அங்கு ஒரு யானை இறந்துகிடப்பது தெரியவந்தது.



இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வனத்துறையினர் சக்திவேல் மற்றும் சந்திரன், கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் யானையின் உடலை பிரேதப்பரிசோதனைக்கு உட்படுத்தி, பின் யானையில் உடலை சிறுத்தை, புலி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவாக அங்கேயே விட்டுச்சென்றனர்.



முன்னதாக இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், இரண்டு யானைகள் மோதிக்கொண்டதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது. இந்த யானை இறந்து 10 நாட்களுக்கும் மேலாகியிருக்கும். தற்போது வன விலங்குகளுக்கு உணவாக இதனை இங்கேயே விட்டுச்செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...