திருப்பூரில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம்

திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: குடிநீர், சாக்கடை வசதி, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கை குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 57 வது வார்டு சின்னபழனிசாமி நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் 25 ஆண்டு காலமாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், தரமான தார் சாலை, சாக்கடை கால்வாய் , மழை நீர் வடிகால் உள்ளிட்ட வசதிகள் இல்லாததன் காரணமாக மிகப்பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், இது குறித்து பலமுறை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கை குறித்து மனு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...