பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும் - மேட்டுப்பாளையத்தில் சமூக நீதி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பஞ்சமி நிலத்தினை மீட்க கோரியும், பஞ்சமி நில விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க கோரியும், சமூக நீதி கட்சி சார்பில், மேட்டுப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சமூக நீதி கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சமூக நீதி கட்சி மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். பஞ்சமி நிலங்களை மீட்டிட தனி ஆணையம் அமைக்க வேண்டும். காரமடை குட்டையூரில் உள்ள, 60 ஏக்கர் பஞ்சமி நில விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பஞ்சமி நில வாரிசுதாரர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளை, வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...