சி.ஐ.டி.யு சார்பில், 20 சதவீதம் போனஸ் வழங்கக் கோரி, பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

மின் வாரிய ஊழியர்களுக்கு, 20 சதவீத போனஸ் அறிவித்துள்ளதுபோல், எங்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: 20 சதவீதம் போனஸ் வழங்கவில்லை எனில், பண்டிகை சமயத்தில் குடிநீர் வினியோகம் தடைபட்டால் தொழிற்சங்கமோ, தொழிலாளர்களோ பொறுப்பல்ல என சி.ஐ.டி.யுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். உதவி தலைவர் பாலகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 'வாரிய பணியாளர்களுக்கு, தன்னிச்சையாக போனஸ் அறிவித்தது கண்டிக்கத்தக்கது, பணியாளர்களுக்கு லாபத்திற்கேற்ப போனஸ் அறிவிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோஷங்களை, 70க்கும் மேற்பட்டோர் எழுப்பினர். சங்க பொதுச் செயலாளர் சரவணன் கூறுகையில், கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கி வந்ததால், 8.33 சதவீத போனஸ் வழங்கப்பட்டது.

தற்போது, குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டு லாபத்தில் இயங்கி வருகிறது. நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படும் போக்குவரத்துக்கழகம், மின் வாரிய ஊழியர்களுக்கு, 20 சதவீத போனஸ் அறிவித்துள்ளது. எனவே, எங்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்றார். கோரிய போனஸ் தொகையை வழங்கவில்லையேல், பண்டிகை சமயத்தில் குடிநீர் வினியோகம் தடைபட்டால் தொழிற்சங்கமோ, தொழிலாளர்களோ பொறுப்பல்ல எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...