உடுமலையில் உள்ள அரசு பள்ளி சுவர்களில் ஓவியம் வரைவதில் மாணவர்கள் ஆர்வம்

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ருதரப்பா நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் உள்ளதாக ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


திருப்பூர்: மாணவர்களுக்கு ஓவியத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி சுவர்களில் சுற்றுச்சூழலை காப்போம், மரம் வளர்ப்போம், நீரை பாதுகாப்போம் போன்ற விழிப்புணர்வு வசங்களுடம் ஓவியம் வரைப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கூறினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ருதரப்பா நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி உள்ளது. மாணவ மாணவியர் இருபாலரும் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.



மாணவர்களுக்கு ஓவியத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி சுவர்களில் சுற்றுச்சூழலை காப்போம், மரம் வளர்ப்போம், நீரை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.



ஓவியம் வரைவதால் மாணவர்களுக்கு மனம் ஒருநிலைப்படும். எனவே மாணவர்களுக்கும் ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்படுத்தப்பட்டது என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...