உடுமலையில் முறைகேடாக மது விற்பனை 4 பேர் கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை

திருப்பூர் மாவாட்டம் உடுமலையில் முறைகேடாக மது விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த 281 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


திருப்பூர்: முறைகேடாக மது விற்பனை செய்தவர்களை தனிப்படை அமைத்து திருப்பூர் காவல்துறை கைது செய்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சில்லறை மது விற்பனை நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தவசியப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் உடுமலை உட்கோட்ட காவல் சரக பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது உடுமலையைச் சேர்ந்த முஸ்தபா(54), மடத்துக்குளம் தாலுக்கா கணியூரை சேர்ந்த முகமது ஷேக்(32), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர்(35), மதுரை மாவட்டத்தை சேர்ந்த பார்த்தசாரதி(38) ஆகியோர் சில்லறை மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து உடுமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 281 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...