லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் - உடுமலையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்திற்கு அர்ப்பணிப்போம் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தென்னை மகத்துவம் மையம் உள்ளது. மத்திய விஜிலென்ஸ் கமிஷனின் உத்தரவு படி லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் முதல் அடுத்த மாதம் 5-ம் தேதி வரை இந்த மையத்தில் டைபிடிக்கபடுகிறது.

இந்த நிலையில் தொடக்க நிகழ்வுக்கு மேலாளர் ரகோத்துமன் தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து அவர் உறுதிமொழியை வாசிக்க அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்தனர். அப்போது 2023ம் ஆண்டிற்கான லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கருத்துருவான ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்திற்கு அர்ப்பணிப்போம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...