முறைகேடாக கிராவல் அள்ளிய வாகனங்கள் - சிறைபிடித்த காவல்துறை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முறைகேடாக கிராவல் அள்ளிய கனரக வாகனங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் லாரிகள் காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டன.


 திருப்பூர்: உடுமலை அருகே முறைகேடாக கிராவல் அள்ளிய வாகனங்களை சிறைபிடித்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முறைகேடாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஜல்லிபட்டி ஊராட்சி உட்பட்ட துணை பாறை அருகில் சீத்தாமடை குட்டை உள்ளது. முறையாக அனுமதி பெறாமல் இந்த குட்டையில் இருந்து கடந்த சில நாட்களாக டிப்பர் லாரிகள் மூலமாக கிராவல் மண்ணை அள்ளிச் சென்றனர். இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்படும் சூழல் உருவானது. மேலும் வனப்பகுதியின் எல்லைக்குள் அமைந்துள்ள இந்த குட்டையில் மண் அள்ளப்படுவதால் அரிய வகை உயிரினங்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.



இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மண்ணை அள்ளுவதற்காக வந்த டிப்பர் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது. மேலும் இது குறித்த தகவல் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் மற்றும் அமராவதி போலீசார் லாரிகளை அப்புறப்படுத்தினார்கள்.

மேலும் இனிமேற்கொண்டு கிராவல் மண்ணை எடுக்கக்கூடாது என்றும், தவறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து கிராவல் மண்ணை எடுக்க வந்த லாரிகள் திரும்பிச் சென்றன. விவசாயிகளும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...