சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - பள்ளி மாணவர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள்

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, பொள்ளாச்சி வட்டம்‌ டாக்டர்‌.மகாலிங்கம்‌ பொறியியல்‌ கல்லூரியில், கலைஞர்‌ நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: வட்டார போக்குவரத்து சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.



கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, பொள்ளாச்சி வட்டம்‌ டாக்டர்‌.மகாலிங்கம்‌ பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப கல்லூரியில்‌ வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலகம்‌ சார்பில்‌ கலைஞர்‌ நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில்‌ 20 ஆண்டுகளுக்கு மேல்‌ விபத்தின்றி வாகனம்‌ ஓட்டிய ஓட்டுனர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌.கிராந்திகுமார்‌ பாடி இ.ஆ.ப., வழங்கினார்‌.



இதே போல் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியொட்டி மாணவர்களுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர்‌ முருகானந்தம்‌, நெடுஞ்சாலைகள்‌ துறை கோட்ட பொறியாளர்கள்‌ மனுந்தி, சரவண செல்வம்‌, டாக்டர்‌.மகாலிங்கம்‌ பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப கல்லூரி செயலர்‌ சி.ராமசாமி மாவட்ட கல்வி அலுவலர்‌ கேசவகுமார்‌ ஆகியோர்‌ பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...