கோவை வெள்ளக்கிணறு பகுதியில் ரயில்வே கேட்டில் லாரி மோதி விபத்து - ரயில் போக்குவரத்து பாதிப்பு..!

சேதமடைந்த ரயில்வே கேட்டினை சரி செய்யும் முழு செலவையும் லாரியின் நிறுவனமே அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்.


கோவை: கோவை வெள்ளக்கிணறு பகுதியில் ரயில்வே கேட்டில் லாரி மோதிய விபத்தில்தில் ரயில்வே கேட் சேதமடைந்ததால் ரயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது.

கோவை - மேட்டுப்பாளையம் ரயில்வே வழித்தடத்தில் நீலகிரி எக்ஸ்பிரஸ் உட்பட பயணிகள் ரயில்கள் தினம் தோறும் பத்து முறைக்கும் மேல் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 7 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளக்கிணறு ரயில் தண்டவாளத்தை கடந்து சரவணம்பட்டி நோக்கி செல்ல இருந்த லாரி ஒன்று, வெள்ளக்கிணறு ரயில்வே கேட்டை கடக்கும் நேரத்தில் உயர்த்தியவாறு இருந்த கேட்டின் பக்கவாட்டில் மோதியுள்ளது. இதில் ரயில்வே கேட் பாதி சேதமடைந்துள்ளது.



இதனை கண்ட ரயில்வே ஊழியர்கள் உடனடியாக அந்த கேட்டுக்கான அனைத்து இணைப்புகளையும் துண்டித்து விட்டு கோவை ரயில் நிலையத்திற்கும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி செல்லும் பேசஞ்சர் ரயிலை தாமதமாக வரும்படி தகவல் அளித்ததால், மேட்டுப்பாளையத்தில் இருந்து தாமதமாக புறப்பட்ட அந்த ரயில் சம்பவ இடத்தை கடக்கும் வரை மெதுவாக வந்து அவ்விடத்தை கடந்த பின் வேகம் எடுத்து கோவை நோக்கி சென்றது.

இது குறித்து லாரியின் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அதனை சரி செய்யும் முழு செலவையும் லாரியின் நிறுவனமே அளிக்கும்படி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...