கோவையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நிலம் மோசடி - மூன்று பேருக்கு சிறை தண்டனை

நண்பர் வெங்கடேசன் என்பவருக்கு கடன் கொடுக்க பணம் இல்லாததால், கோவை, கணபதியை சேர்ந்த செந்தில்நாதன் என்பவர், தனக்கு சொந்தமான அன்னூரில் உள்ள 1.52 ஏக்கர் நிலத்தை, 2020ம் ஆண்டு அடமானம் வைத்து பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.


கோவை: போலி பத்திரம் மூலம் நிலத்தை ஆள்மாறட்டம் செய்து விற்பனை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை, கணபதியை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவருக்கு அன்னூரில், 1.52 ஏக்கர் நிலம் உள்ளது. 2020ம் ஆண்டு செந்தில்நாதனின் நண்பர் வெங்கடேசன் அவரிடம் பணம் கேட்டார். பணம் இல்லாத காரணத்தால், தனது அன்னூர் நிலத்தை அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொள்ள, செந்தில்நாதன் அறிவுறுத்தினார். வெங்கடேசன், செந்தில்நாதனின் இடப்பத்திரத்தை பெற்று கலைச்செல்வன் என்பவரிடம் அடமானம் வைத்தார்.

இந்நிலையில், அந்த இடத்தை ஆள்மாறாட்டம் செய்து வேறு நபர்களுக்கு விற்பனை செய்தது செந்தில்நாதனுக்கு தெரிந்தது. இதனையடுத்து அவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். தனிப்படையினர் விசாரணையில், சென்னையை சேர்ந்த ஜோதி மற்றும் ஜாகீர்உசைன் ஆகியோர் பாலசுப்ரமணியன் என்பவரை, செந்தில்நாதன் என கூறி, போலி அடையாள அட்டை தயாரித்து ஆள்மாறாட்டம் செய்தது தெரிந்தது.

இவர்களுடன் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நந்தகுமார் 49, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரத்தினசாமி61 ஆகியோர் இணைந்து நிலத்தை ஜெயச்சந்திரன் என்பவருக்கு விற்பனை செய்தது தெரிந்தது.

இதையடுத்து, தனிப்படையினர் நந்தகுமார், ரத்தினசாமி மற்றும் துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் 41, ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். 1.52 ஏக்கர் நிலப்பத்திரத்தை பறிமுதல் செய்தனர். வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க, தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...