ஆனைமலை அருகே அனுமதி சீட்டு இல்லாமல் கேரளாவுக்கு கனிம வளம் கடத்தல் - 3 லாரிகள் பறிமுதல்

மீனாட்சிபுரம் பகுதியில் கோவை புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளா மாநிலத்துக்கு கற்களை ஏற்றிச் சென்ற, கேரள பதிவு எண் கொண்ட, மூன்று டிப்பர் லாரிகளை மறித்து ஆவணங்களை சோதனை செய்தனர்.


கோவை: மீனாட்சிபுரம் பகுதியில் ஆய்வின்போது, பிடிப்பட்ட மூன்று டிப்பர் லாரிகளை, கோவை புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர், பறிமுதல் செய்து,ஆனைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஆனைமலை அருகே, மீனாட்சிபுரம் பகுதியில் கோவை புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளா மாநிலத்துக்கு கற்களை ஏற்றிச் சென்ற, கேரள பதிவு எண் கொண்ட, மூன்று டிப்பர் லாரிகளை மறித்து ஆவணங்களை சோதனை செய்தனர். அதில், முறையான அனுமதி சீட்டு இல்லாமல், ஏழு யூனிட் அளவுள்ள கற்களை ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது.

வாகனங்களை பறிமுதல் செய்து, ஆனைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், முறையாக அனுமதி சீட்டு இல்லாமல் கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு சென்ற மூன்று லாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...