தாராபுரம் நகர் பகுதியில் வசிப்போருக்கு வீட்டு மனை பட்டா - நேரில் ஆய்வு செய்த ஆர்டிஓ

தாராபுரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் மின்வசதி மற்றும் பட்டா இல்லாமல் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டா கேட்டு நகராட்சியில் மனு கொடுத்துள்ளனர்.


திருப்பூர்: வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ உறுதி அளித்துள்ளார்.

தாராபுரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் மின்வசதி மற்றும் பட்டா இல்லாமல் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டா கேட்டு நகராட்சியில் மனு கொடுத்துள்ளனர். அதற்கான தீர்வு கான வேண்டி நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதனை நிறைவேற்றும் வகையில் பட்டா இல்லாத அனைத்து வீட்டிற்கும் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அதன்படி நகராட்சி தலைவர் மக்களின் கோரிக்கை மனுக்களுடன் அனைத்து ஆவணங்களையும் இணைத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் சேர்த்து ஆர்.டி.ஓ.செந்தில் அரசனிடம் வழங்கினார். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட ஆர்.டி.ஓ. கூடிய விரைவில் மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அதனை தொடர்ந்து நேற்று ஆர்.டி.ஓ. காமராஜபுரம், இறைச்சி மஸ்தான் தெரு ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறும்போது “ நகராட்சி தலைவர் மூலம் வீட்டு மனைப்பட்டா மற்றும் மின் இணைப்பு தடை சான்று வழங்க நேரில் ஆய்வு செய்யப்பட்டு மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் அறிக்கையை கலெக்டருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது தாசில்தார் கோவிந்தசாமி, கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தி உடன் இருந்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...