மகளிர் உரிமைத் தொகை வரவில்லையா? - தாலுக்கா அலுவலகங்களை நாட கோவை ஆட்சியர் அறிவுறுத்தல்

கோவை புறநகர் மற்றும் மாவட்டங்களின் சில பகுதிகளில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை வர வில்லை என புகார் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி விளக்கம் அளித்துள்ளார்.


கோவை: மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்றால் வட்டாச்சியர் அலுவலகங்களை நாடுமாறு கோவை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்

கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணியூர் ஊராட்சியில உள்ளாட்சி தின விழாவையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் கணியூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.



இதில் மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி சிறப்பு மேற்பார்வையாளராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கணியூர் ஊராட்சி சார்பில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 



ஊராட்சியில் சிறப்பாக செயலாற்றிய தூய்மை காவலர்களை மாவட்ட ஆட்சியர் கௌரவித்தார். அப்போது முன்கள பணியாளர்கள் சிலர் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை வரவில்லை என முறையிட்டனர். அதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆயிரம் ரூபாய் கிடைக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும் என ஆட்சியர் உறுதி அளித்தார்.

பின்னர் கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசுகையில்,



இந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கிராமங்களுக்கான திட்டங்கள் அதிகரித்துள்ளது. அதேவேளை அதற்கான சவால்கள் அதிகமாக உள்ளது. குறிப்பாககூட்டு குடிநீர் திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கமழைநீர் சேமிப்பு திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் கட்டிடமாக இருந்தாலும் அரசு கட்டிடமாக இருந்தாலும் நிலத்தடி நீரை சேமிக்க அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை பொருத்தமட்டில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வழங்க உள்ளாட்சி அமைப்புகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் கண்டிப்பாக கிசான் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் பயிர் கடன் வாங்குவதற்கான பல்வேறு பயன்கள் இருந்து வருகிறது. 60 ஆயிரம் ரூபாய் வரை எந்தவிதமான அடமானம் இல்லாமல் கடன் பெறுவதற்கான வசதி கிசான திட்டத்தில் உள்ளது என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்,



கிராம சபை கூட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதிகரிக்கும் மக்கள் பயன்பாட்டு காரணமாக அந்தந்த பகுதிகளில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மக்கள் முன்னெடுத்து நடத்த வேண்டும், புறநகர் பகுதிகளில் மகளிர் உரிமைத்தொகை பெரும்பாலானோருக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக தாலுக்கா அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.கணியூர் பஞ்சாயத்தில் பொன்னாண்டாம் பாளையம் கிராமத்தை இணைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சூலூர் வக்பு வாரிய நிலம் குறித்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும், வருவாய்த் துறை மூலம் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இந்த கிராம சபை கூட்டத்தில் சூலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வி.பி.கந்தசாமி மற்றும் அரசு அலுவலர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...