உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு பிரிவு உபச்சார விழா - காவலர்கள் பாராட்டு

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் போக்குவரத்துக் காவல் ஆய்வாளராக பணியாற்றிய வெங்கடேசன் அவர்களின் பிரிவு உபச்சார விழா நகராட்சி தேஜஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் எங்கு ஏற்பட்டாலும் உடனே சம்பவ இடத்திற்கு சென்று காவல் ஆய்வாளர் சீரமைக்கும் பணியில் ஈடுபடுவார் என பிரிவு உபச்சார விழாவில் காவலர்கள் பாராட்டி பேசினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் போக்குவரத்துக் காவல் ஆய்வாளராக பணியாற்றிய வெங்கடேசன் அவர்களின் பிரிவு உபச்சார விழா நகராட்சி தேஜஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் உடுமலை காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், மடத்துக்குளம் காவல் ஆய்வாளர் பாலமுருகன், கோவை திருப்பூரில் உடன் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் உடுமலை ஊர்க்காவல் படையினர் மற்றும் உடுமலை உட்கோட்டத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு காவலர்கள் மற்றும் தலைமை காவலர்கள் மற்றும் உடுமலை பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து காவல் ஆய்வாளரை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், அரசியல் கட்சி தலைவர்கள் வரும் பொழுது எந்த வித பாகுபாடு இல்லாமல் அனைத்து காவலர்களுடன் ஒருங்கிணைந்து போக்குவரத்தை திறம்பட சீர்படுத்தினார். போக்குவரத்து நெரிசல் உடுமலை பகுதியில் எங்கு ஏற்பட்டாலும் உடனே சம்பவ இடத்திற்கு சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபடுவார் என பல்வேறு தரப்பினர் மேடையில் பாராட்டி பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...