கோவை ஜான்சன் தொழில்நுட்பக் கல்லூரியில் தீ விபத்து - லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

கோவை அருகே உள்ள ஜான்சன் தொழில் நுட்ப கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டது மின் கசிவு காரணமாக ஏற்பட்டுள்ள தீ விபத்தில் சிக்கிய 3 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என கூறப்படுகிறது.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஜான்சன் தொழில்நுட்பக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.



கல்லூரி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் பிற்பகலில் கரும்புகை வெளியேறியது. உடனடியாக கல்லூரி வளாகத்தில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.



தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



அன்னூர், அவிநாசி மற்றும் சூலூர் தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு வந்துள்ள கருமத்தம்பட்டி போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆடிட்டோரியத்துக்குள் சென்ற மூவருடைய நிலை குறித்து தகவல் தற்போது வரை வெளியாகாத நிலையில் விபத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...