உடுமலையில் அரசு பெண்கள் பள்ளியில் தமிழ் கூடல் விழா

தமிழ் கூடல் விழாவையொட்டி பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டி கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் தமிழ் கூடல் விழா சிறப்பாக நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ் கூடல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ப. விஜயா தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார். பள்ளி தமிழ் மன்றச் செயலர் தமிழாசிரியர் வே சின்னராசு வரவேற்புரை நல்கினார்.



முதுகலை உதவித் தலைமை ஆசிரியர் த ஏ ஜெயராஜ், பட்டதாரி உதவித் தலைமை ஆசிரியர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர் தமிழ் வளர்த்த சான்றோர்கள் என்னும் தலைப்பில் கலை இளமணி திருநெறிய தமிழரசி செல்வி உமா நந்தினிபால கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். தமிழ்க்கூடல் நிகழ்ச்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டி கவிதைப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டன. முதுகலைத் தமிழ் ஆசிரியர் தி ஆர் கார்த்திகா நன்றியுரை ஆற்றினார்.



நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவியர்கள் கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியர்கள் தைலியண்ணன் ஆர் ராஜேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...